20 ஓவர் உலக கோப்பை: இங்கிலாந்து வீரர் ஜோரூட் விலகல்

Written by vinni   // March 7, 2014   //

f15284e7-6c15-4a18-b6bf-535fa5f25228_S_secvpfஇங்கிலாந்து அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3–வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோரூட் கைவிரலில் காயம் அடைந்தார். இதனால் வருகிற 16–ந்தேதி தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அவர் விளையாடமாட்டார் என தெரிகிறது.

காயத்துக்கு சிகிச்சை பெற ஜோரூட் இங்கிலாந்து திரும்புகிறார். ஜோரூட் விலகல் பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 22–ந்தேதி நியூசிலாந்தை சந்திக்கிறது


Similar posts

Comments are closed.