சந்தோஷ் கோப்பை கால்பந்து: அரையிறுதியில் தமிழகம் தோல்வி

Written by vinni   // March 7, 2014   //

7271cb1e-507e-458a-9d43-9334ed9cecfa_S_secvpfசந்தோஷ் கோப்பைக்கான 68–வது தேசிய சீனியர் கால்பந்து போட்டி மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் மிசோரம் முதலிடத்தையும், மராட்டியம் 2–வது இடத்தையும், பி பிரிவில் இந்தியன் ரெயில்வே முதலிடமும், தமிழ்நாடு 2–வது இடமும் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

இன்று நடைபெற்ற முதலாவது அரை இறுதியில் தமிழ்நாடு– மிசோரம் அணிகள் மோதின. இதில் மிசோரம் அணி 3-1 என்ற கோல் கணக்கில் தமிழகத்தை வென்றது.

இன்று மாலை நடக்கும் மற்றொரு அரை இறுதியில் 3 முறை சாம்பியன்களான இந்தியன் ரெயில்வே – மராட்டியம் அணிகள் மோதுகின்றன


Similar posts

Comments are closed.