ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் கசையடி கொடுத்து தூக்கிலிட வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய

Written by vinni   // March 7, 2014   //

download (1)விடுதலைப் புலிகளை போஷித்து வளர்த்த தமிழக அரசியல்வாதிகளையே முதலில் சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளரும் மேல் மாகாண வேட்பாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லை – பண்ணிப்பிட்டிய வீதியில் அமைந்துள்ள அந்த கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்கு தமிழீழ நாட்டை உருவாக்கி தருவதாக கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரான அவர் இந்தியாவின் பிரதமரான வரபோவதாக பேசி வருகிறார். இந்திய பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், இலங்கையை ஆக்கிரமித்தாவது ஈழத்தை உருவாக்க போவதாக பிதற்றி வருகிறார்.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஈழத்தை உருவாக்கி கொடுக்கும் முன்னர் தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு உண்ணவும், குடிக்க கொடுத்து, அங்கு மின்சாரத்தை வழங்கி, வீடுகளை நிர்மாணித்து கொடுத்து, கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு நாங்கள் ஜெயலலிதாவுக்கு கூறவிரும்புகிறோம்.

தேவையானால் தமிழ் நாட்டை தனிநாடாக உருவாக்கி, இங்குள்ள தமிழர்களை அங்கு அழைத்துச் செல்லுங்கள். அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. தமிழ் நாடே தமிழ் ஈழ வாதத்தின் கேந்திர நிலையம் என்பது எங்களுக்கு தெரியும்.

70 ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டில் இருந்தே தமிழ் பிரிவினைவாத பயங்கரவாதிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டனர். இதனால் மூன்று தசாப்தகாலமாக பாதிப்புகளை அனுபவித்தோம். அத்துடன் பாரிய உயிர் சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்டன. நாட்டின் அபிவிருத்தி பின்நோக்கி சென்றது. பயங்கரவாத்தில் இருந்து நாட்டை மீட்க 26 ஆயிரம் படையினர் உயிர்களை தியாகம் செய்ததுடன் 24 ஆயிரம் பேர் அங்கவீனமடைந்தனர்.

எமது நாட்டில் செய்த அழிவுகளுக்கு தமிழ் நாடு பொறுப்புக் கூறவேண்டும். சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாயின் தமிழ் புலிப் பயங்கரவாத்திற்கு அணுசரனை வழங்கி, பாதுகாப்பு வழங்கிய தமிழ் நாட்டு அரசியல்வாதிகளையே கொண்டு செல்ல வேண்டும்.

ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களை மின்சார நற்காலியில் வைக்கக் கூடாது. 10 கசையடிகளை கொடுத்து தூக்கிலிட்டு கொலை செய்ய வேண்டும். இலங்கை மன்னர் காலத்திற்கு தண்டனையே இவர்களுக்கு பொருத்தமானது.

இலங்கையின் இறுதி மன்னரான தென்னிந்திய நாயக்கர் வமசத்தை சேர்ந்த ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் மன்னன், ஹெலபொல அதிகாரத்தின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு வழங்கிய தண்டனையே ஜெயலலிதாவுக்கு வழங்க வேண்டும்.

எம்.ஜி. ராமசந்திரனுடன் தமிழ் படங்களில் நடனம் ஆடிவிட்டு இன்று அரசியலுக்கு வந்து எமது நாட்டை அச்சுறுத்துவதை கண்டு நாங்கள் அஞ்சவில்லை என்பதை ஜெயலலிதாவுக்கு கூறிவைக்க விரும்புகிறோம் என நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.