ஐ.நாவின் உடன்படிக்கையில் இலங்கை அரசு கையெழுத்திட வேண்டும் – பிரித்தானியா

Written by vinni   // March 7, 2014   //

britonமோதல்களின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருதல் மற்றும் அதனை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் பிரசாரத்தை மேற்கொள்ளும் ஐ.நாவின் உடன்படிக்கையில் இலங்கை அரசு கையெழுத்திட வேண்டும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை சமூகத்தில் பெண்கள் முன்னணி பங்கை வகிக்கின்றனர். பெண்கள் நடவடிகைகளிலும் பல துறைகளிலும் முக்கிய பொறுப்புகளிலும் முக்கிய பதவிகளில் உள்ளனர்.

பெண்கள் தமது வீடுகளில் குடும்பத் தலைவர்களின் பாகுபாடு மற்றும் வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  அதேவேளை இலங்கையின் நீண்டகால மோதல்கள் காரணமாக 89 ஆயிரம் பெண்கள் விதவைகளாகியுள்ளனர்.

மோதல்களின் போது இடம்பெறும் பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் அது தொடர்பான சர்வதேச ரீதியில் பிரசாரங்களை மேற்கொள்ளும் ஐ.நா உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இலங்கை அரசாங்கத்தை பிரித்தானியா ஊக்குவிக்கும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.