ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்

Written by vinni   // March 7, 2014   //

downloadஇலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென தென் ஆபிரிக்க பேராயரும், மனித உரிமை ஆர்வலருமான டெஸ்மன் டுடு ஆண்டகை கோரியிருந்தார்.

இந்த கோரிக்கையானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கான ஓர் விழிப்பு கோரிக்கை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரையில் விசாரணை நடாத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும் உரிய விசாரணைகளை அரசாங்கம் நடாத்தத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் உதயமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்


Similar posts

Comments are closed.