85 சதவீதம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடம் போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு செல்வாக்கு

Written by vinni   // March 7, 2014   //

pope-francisஉலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக விளங்கும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அணுகுமுறைகள் கிறிஸ்தவர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. இது தொடர்பாக ஒரு நிறுவனம் அமெரிக்காவில் வசிக்கும் கிறிஸ்தவர்களிடம் பிப்ரவரி 14-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையில் 1,340 பேரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்து கணிப்பு நடத்தியது.

இதில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் 85 சதவீதம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடம் செல்வாக்கு பெற்று இருப்பது தெரியவந்தது. 68 சதவீதம் பேர் இன்னும் அதிக மாற்றம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் அதேநேரத்தில் ஆலய வழிபாட்டிற்கு செல்வோர், சமூகசேவையில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறிப்பிடும்படி உயரவில்லை. மேலும் குடும்பக்கட்டுப்பாடு, பாதிரியார்கள் விஷயத்தில் சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.

இதற்கு முன்பு மறைந்த போப் ஜான் பால் அமெரிக்க மக்களிடம் மிக அதிக அளவாக 93 சதவீதம் மக்களின் செல்வாக்கை பெற்று திகழ்ந்தார். கடந்த 2008-ம் ஆண்டில் போப் பெனடிக் 83 சதவீதம் ஆதரவை பெற்றார்.


Similar posts

Comments are closed.