மிகப்பெரிய கோப்புக்களை பகிர உதவும் iOS அப்பிளிக்கேஷன்

Written by vinni   // March 6, 2014   //

wetransfer_iOS_001மின்னஞ்சல் மூலமாக பல்வேறு கோப்புக்களையும் பகிர்ந்து கொள்ளும் வசதி காணப்படுகின்ற போதிலும் குறிப்பிட்ட கொள்ளளவு உடைய கோப்புக்களையே பகிர முடியும்.
எனினும் பெரிய அளவிலான கோப்புக்களை பகிர்ந்துகொள்வதற்கு சில ஒன்லைன் இணையத்தள வசதிகள் காணப்படுகின்றன.

அவ்வாறே அப்பிளின் iOS இயங்குதளத்தினைக் கொண்ட மொபைல் சாதனத்திலிருந்து 10GB வரையிலான கோப்புக்களை பகிர்ந்துகொள்வதற்கு WeTransfer எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறுஞ்செய்திகளுடன் இணைத்தும் பெரிய கோப்புக்களை பகிரும் இந்த வசதியில் Plus எனும் மற்றுமொரு கணக்கு காணப்படுகின்றது.

இதில் 50GB வரையான கோப்புக்களை பகிர முடிவதுடன் மாதம் ஒன்றிற்கு 10 டொலர்களும், வருடத்திற்கு 120 டொலர்களும் செலுத்தி இந்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தரவிறக்கச் சுட்டி

 


Similar posts

Comments are closed.