டோனியை மிஞ்சிய கோஹ்லி

Written by vinni   // March 6, 2014   //

virat_kohli_002இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் அணித்தலைவர் டோனியை மிஞ்சியுள்ளார் வீராட் கோஹ்லி.

கூகுள் நிறுவனம் இணையதளத்தில் கடந்த 30 நாட்களில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் யார் என்று ஆய்வு செய்தது.

இந்த ஆய்வின் முடிவில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி என்பது தெரிய வந்துள்ளது.

ஆசிய கோப்பை போட்டியில் இருந்து டோனி கடைசி நேரத்தில் விலகியதும், கோஹ்லி அணித்தலைவராக சதம் அடித்ததும் தான் அவர் இணையதளத்தில் அதிக தேடப்பட காரணம்.

இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், விராத் கோஹ்லிக்கும் காதல் என்று அண்மை காலமாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த காதல் விவகாரமும் கோஹ்லியை பலர் கூகுள் செய்ய காரணம்.

ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி யுவராஜ் சிங்கை ரூ.14 கோடி கொடுத்து வாங்கியது. இந்நிலையில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆகும்.

வீரேந்திர சேவாக் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளனர்.

கடந்த ஆண்டு டோணியைக் காட்டிலும் கோஹ்லி அதிக விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.