தொடரை வென்றது அவுஸ்திரேலியா! தென் ஆப்ரிக்காவின் போராட்டம் வீண்

Written by vinni   // March 6, 2014   //

australia_southafrica_test3_002தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 245 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

மூன்றாவது போட்டி கேப்டவுனில் நடந்தது. முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 494 (‘டிக்ளேர்’), தென் ஆப்ரிக்கா 287 ஓட்டங்கள் எடுத்தன.

அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 303(டிக்ளேர்) ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து தென் ஆப்ரிக்கா அணிக்கு 511 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 71 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது, டிவில்லியர்ஸ் 43 ஓட்டங்களில் கிளம்பினார். அபாட்(7) நிலைக்கவில்லை, டுபிளசி (47) அரை சத வாய்ப்பை இழந்தார். தன் பங்கிற்கு டுமினி 43 ஓட்டங்கள் சேர்த்தார்.

கடைசியில் பிலாண்டர், ஸ்டைன் போராடினர், பிலாண்டர் அரை சதம் எட்டினார். ஹாரிஸ் பந்துவீச்சில் ஸ்டைன்(1 ரன்,44 பந்து), மார்னே மார்கல் (0) அவுட்டாகினர்.

தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 265 ஓட்டங்களுக்கு ஆல்–அவுட்டாகி, 245 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

4.3 ஓவர் மீதமிருக்கையில் ‘திரில்’ வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி, தொடரை 2–1 என கைப்பற்றியது.


Similar posts

Comments are closed.