அழுகிய வாழைப்பழத்தை சாப்பிடு! ஆசிரியரின் டார்ச்சர்

Written by vinni   // March 6, 2014   //

bananaகனடாவில் பள்ளி மாணவியை துன்புருத்திய ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தை சேர்ந்த பியங்டன் என்ற 8 வயது சிறுமி ரொறன்ரோவில் பயின்று வருகிறார்.

இவர் கடந்த 27ம் திகதி இம்மாணவியின் வகுப்பறைக்கு வந்த மாற்று ஆசிரியர் ஒருவர், குப்பையில் வீசப்பட்ட வாழைப்பழத்தை உண்ணுமாறு அச்சிறுமியை வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு இணங்க மறுத்த மாணவி, வாழைப்பழத்தில் கரும்புள்ளிகள் படர்ந்து அழுகிய நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

எனினும் அதனை ஏற்க மறுத்த ஆசிரியர், உணவின் மதிப்பை கற்பிப்பதாக கூறி அப்பழத்தை உண்ண வைத்துள்ளார். இதனால் மனம் நொந்த பியங்டன் நடந்தை தன் தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தாயார் ஜோடன் ஸ்ரூவட் கூறுகையில், குப்பைக்குள் எறியப்பட்ட அழுகிய பழத்தில் ஒரு துண்டை ஆசிரியர் சாப்பிட்டுவிட்டு மீதி வாழைப்பழத்தை மகளிடம் கொடுத்து கட்டாயப்படுத்தி உண்ண வைத்துள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிட்ட அந்த ஆசியரால் பல கொடுமைகளை தன் மகள் சந்தித்துள்ளதாக கூறிய தாயாரின் புகார் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


Similar posts

Comments are closed.