போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா ஏவுகணை சோதனை

Written by vinni   // March 6, 2014   //

russia_testing_002உக்ரைன் விவகாரத்தால் ரஷ்யாவுக்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே போர் மூளூம் சூழல் உருவாகியுள்ளது.

உக்ரைனில் கடந்தாண்டு நவம்பர் மாதம் போராட்டம் நடந்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த முடியாத ஜனாதிபதி விக்டர் ரஷ்யாவுக்கு தப்பி சென்று விட்டார், இதனை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவான அரசு இடைக்கால ஆட்சி அமைத்தது.

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா படைகள் களமிறங்கியதால், ரஷ்யாவுடனான ராணுவ ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ராணுவ பயிற்சியை அமெரிக்கா நிறுத்திவிட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டு பயிற்சிக்கு சென்ற வீரர்களை உடனடியாக முகாமுக்கு திரும்ப ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ரஷ்யா நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல் சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இந்த சோதனை குறித்து ரஷ்யாவிடம் இருந்து ஏற்கனவே தகவல் வந்திருந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் அஸ்ட்ரஹான் தெற்கு பிராந்தியத்தில் இருந்து கஜகஸ்தான் பகுதியை இலக்காக கொண்டு இந்த ஏவுகணை போர் ஒத்திகை தாக்குதல் நடைபெற்றதாக ரஷ்ய ராணுவ அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.