ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் பொருளாதார தடைகளை கொண்டு வர முடியாது!

Written by vinni   // March 6, 2014   //

un tk 01ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளில் இலங்கைக்கு ஆதரவான சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இருப்பதால் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டு வர முடியாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்று கடந்த 9 வருடங்களில் நாட்டில் இருந்து வந்த பல பாரதூரமான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளார்.

அதேபோல் சர்வதேசத்தை வெற்றி கொள்ளவும் அவருக்கு வல்லமை இருக்கின்றது..

எதிர்வரும் 29 ம் திகதி ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்பிக்கப்பட உள்ள தீர்மானம் குறித்து தற்பொழுதே எதனையும் கூற முடியாது.

அவர்கள் கொண்டு வரும் தீர்மானம் தொடர்பிலான தீர்வுகளை காண ஒரு வருட கால அவகாசம் கிடைக்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.