ஐ.நா மனித உரிமை ஆணையாளர் – ஜீ.எல்.பீரிஸ் இன்று சந்திப்பு

Written by vinni   // March 6, 2014   //

GL 10_CIஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 25 வது கூட்டத் தொடரில் கலந்து கொள்ள சென்றுள்ள,வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இன்று சந்திக்க உள்ளார்.

மனித உரிமை ஆணையாளரை தவிர பல நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் அறிவிக்க உள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று உரையாற்றிய அமைச்சர் பீரிஸ், இலங்கை தொடர்பாக நவநீதம்பிள்ளை தாக்கல் செய்துள்ள அறிக்கை முற்றாக நிராகரித்து உரையாற்றியிருந்தார்.


Similar posts

Comments are closed.