இலங்கைக்கு எதிராக புத்தகம் ஒன்றை கலம் மக்ரே வெளியிட்டுள்ளார்: சிங்கள ஊடகம்

Written by vinni   // March 4, 2014   //

callum-macrae-channel-4இலங்கைக்கு எதிராக சனல்-4 ஊடகத்தின் இயக்குனர் கலம் மக்ரே, புத்தகம் ஒன்றை எழுதியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“அன்கரப்டட் ட்ருத்” என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்கதம் 20,000 சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த புத்தகத்தில் இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களினால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட கருத்துக்கள் இந்த புத்தகததில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த நூலின் 3000 பிரதிநிதிகள் ஜெனீவாவில் நேற்று விநியோகம் செய்யப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.