பு­லிகள் பொது­மக்­களை கொலை செய்­ய­வில்லை

Written by vinni   // March 4, 2014   //

mannar_skeleton_003தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் பொது­மக்­களை கொலை­செய்த சந்­தர்ப்­பங்கள் ஒரு­போதும் நிகழ்ந்­தி­ருக்­க­வில்லை. ஆகவே முல்­லைத்­தீவு மூங்­கி­லாறு பிர­தே­சத்தில் மீட்­கப்­பட்ட மனித எலும்­புக்­கூ­டுகள் யுத்­தத்தில் உயி­ரி­ழந்த அப்­பாவிப் பொது­மக்­க­ளு­டை­ய­தாக இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்­களே அதி­க­முள்­ளது.

தருணம் பார்த்து அர­சாங்கம் விடு­த­லைப்­பு­லிகள் மீது பழி­சு­மத்­து­கின்­றது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், பேச்­சா­ள­ரு­மான சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

முல்­லைத்­தீவு மூங்­கி­லாறு பிர­தே­சத்­தில்­ க­டந்த வெள்ளிக்­கி­ழமை ஒன்­பது மனித எலும்­புக்­கூ­டுகள் மீட்­கப்­பட்­டி­ருந்­தன.

விடு­த­லைப் ­பு­லி­களால் கொலை­ செய்­யப்­பட்ட பொது­மக்­களின் எலும்­புக்­கூ­டுகள் தான் அவை­யெ­னவும் அதற்­கான சாட்­சி­யாக பொது­மகன் ஒரு­வரின் வாக்­கு­மூ­ல­மொன்று கிடைக்­கப் ­பெற்­றி­ருப்­ப­தாக தகவல் வெளியி­டப்­பட்­டி­ருக்­கின்­றமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 2009ஆம் ஆண்டு நடை­பெற்ற இறுதி யுத்­தத்தின் போது மக்கள் பாது­காப்பு வலயங்கள் பல உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தன. இருப்­பினும் மக்கள் பாது­காப்பு வல­யங்­களில் இடம்­பெற்ற ஷெல் தாக்­கு­தல்­க­ளினால் பொது­மக்கள் பலர் கொல்­லப்­பட்­டனர்.

கொல்­லப்­பட்ட பொது­மக்­களின் உடல்கள் அப் பாது­காப்பு வலயத்­தி­னுள்ளும் அத­னைச்­சூ­ழ­வுள்ள பிர­தே­சங்­க­ளிலும் புதைக்­கப்­பட்­டன என்­ப­தற்­கா­கன சாட்­சி­யங்கள் அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த கற்­றுத்­தந்த பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­விற்கு அளிக்­கப்­பட்­டுள்­ளன.

தமி­ழீழ விடு­த­லைப்­ பு­லி­களைப் பொறுத்­த­வ­ரையில் பொது­மக்­களை மிரட்டிய­ குற்­றச்­சாட்­டுக்­களை நாம் கேள்­விப்­பட்­டி­ருக்­கின்றோம். அதனை நாம் மறுக்­க­வு­மில்லை. ஆனால் ஒரு போதும் பொது­மக்­களை அவர்கள் கொலை செய்­தார்கள் என கேள்­விப்­ப­ட­வில்லை. அவர்கள் அவ்­வாறு செய்­த­து­மில்லை.

அர­சாங்கம் தற்­போது ஜெனிவாவில் நெருக்­க­டி­களைச் சந்­தி­க்கும் நிலையில் நாட்டின் பல­பா­கங்­க­ளிலும் மனித எலும்­புக்­கூ­டுகள் தொடர்ச்­சியாக மீட்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் நிலையில் தருணம் பார்த்து விடுதலைப் புலிகளின் மீது பழியைச் சுமத்தி அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முயல்கின்றது.

எவ்வாறாயினும் குறித்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதோடு மேலும் அப்பகுதியில் மீட்புப் பணிகளை தொடரும் பட்சத்தில் உண்மை வெளிப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.