ஆசிய கிண்ணம்: இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி

Written by vinni   // March 4, 2014   //

srilanka_win_3rd_001ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் 129 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்படுத்தாட தீர்மானித்தது

முதலில் துடுப்படுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு 253 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குமார் சங்கக்கார 76 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக மிர்வைஸ் அஷ்ரப் 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

வெற்றி இலக்கான 254 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 38.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

நஜ்புல்லா சட்ரான் அதிகபட்சமாக 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் மற்றும் திஸர பெரேரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக குமார் சங்கக்கார தெரிவானார்.

நேற்றைய போட்டியில் பெற்ற வெற்றி மூலம், போனஸ் புள்ளியுடன் மொத்தமாக 13 புள்ளிகளைப் பெற்று இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது. 9 புள்ளிகளுடன் பாகிஸ்தான் இரண்டாமிடத்திலும், 4 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாமிடத்திலும் உள்ளது.


Similar posts

Comments are closed.