படுமோசமான தோல்விக்கு என்ன காரணம்? விளக்குகிறார் கவாஸ்கர்

Written by vinni   // March 4, 2014   //

gavaskar_001எவ்வித இலக்கும் இல்லாமல் செயல்படுவதால் தான் இந்திய அணி வீரர்கள் மிக மோசமாக செயல்படுகின்றனர் என முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

வங்கதேசத்தில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது, இதன் லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்ததால் இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் கூறுகையில், இந்திய வீரர்களின் செயல்பாடு எவ்வித இலக்கும் இல்லாமல் உள்ளது. இதனால் அடுத்தடுத்து படுமோசமான தோல்விகள் கிடைக்கின்றன. இவர்களின் பயிற்சி முறைகள் ஒன்றுமே சரியில்லை.

விருப்பம் போல பயிற்சி செய்கின்றனர், விராத் கோஹ்லி, ஷிகர் தவான் தவிர மற்றவர்கள் பயிற்சியை புறக்கணித்ததை மன்னிக்கவே முடியாது.

சமீபகாலமாக பாகிஸ்தான் அணி 250 ஓட்டங்களுக்கும் மேலான இலக்கை ‘சேஸ்’ செய்ய முடியாமல் தோற்கிறது. இதற்கு ஏற்றார் போல இந்திய வீரர்கள் ஓட்டங்கள் எடுப்பதை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால், மிதமிஞ்சிய நம்பிக்கையில் தேவையில்லாத ‘ஷாட்களை’ அடித்து, விக்கெட்டுகளை பறிகொடுத்து திரும்பினர். ஷேர்– இ– பங்களா மைதானத்தின் பவுண்டரி அளவு குறைவாக இருந்ததால், சிக்சர்கள் மிக எளிதாக அடிக்கப்பட்டன.

ஆசிய கிண்ணம் போன்ற பெரிய தொடரில், முதன் முறையாக அணித்தலைவராக களமிறங்கிய கோஹ்லி சிறப்பான முறையில் தான் செயல்பட்டார். ஏனெனில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கடைசி ஓவரில் தான் தோல்வி கிடைத்தது என்று தெரிவித்துள்ளார்.

 


Similar posts

Comments are closed.