அதிகமா கோபப்படாதீங்க! மாரடைப்பு வந்துடும்

Written by vinni   // March 4, 2014   //

angry_002அதிகம் கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொது சுகாதார பிரிவின் ஆராய்ச்சிக் குழு நடத்திய ஆய்வில், ஒருவர் தன் நிதானத்தை இழப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படும் ஆபாயம் அதிகரிக்கும்.

மேலும் ஒருவருக்கு பெருங்கோபம் வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதாகவும், பக்கவாதம் ஏற்ப்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகரிப்பதாகவும் கண்டறிந்துள்ளது.

ஆயிரக்கணக்கான நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒருவர் தன் வாழ்நாளில் எந்த அளவு இந்த மாதிரி அதிகம் கோபப்படுகிறாரோ, அந்த அளவுக்கு அவர் பாதிக்கப்படுவார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.