ரஷ்யா மீது பொருளாதார தடை? ஒபாமா ஆலோசனை

Written by vinni   // March 4, 2014   //

russia_ukraine_troops_002உக்ரைன் மீதான பிரச்னையில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் ஆட்சிக்கு வந்தனர், ரஷ்யாவின் அனுதாபியாக இருந்த விக்டர் யானுகோவிச் துரத்தப்பட்டார்.

இதனையடுத்து உக்ரைனின் கிரீமியா என்ற சுயாட்சி பிரதேசத்தை ரஷ்யா ராணுவம் கைப்பற்றியதுடன் ஏராளமான வீரர்கள் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றினர், அங்கு பாதுகாப்புக்கு நின்ற எல்லைப்படை வீரர்கள் திரும்ப பெறப்பட்டு விட்டனர்.

உலக நாடுகள் தலையிட வேண்டும் என உக்ரைன் இடைக்கால அரசு கோரிக்கை விடுத்தது.

இதற்கிடையே உக்ரைன் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட கூடாது என்று ரஷ்யாவிற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்தன. மேலும், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

மேலும் ரஷ்யாவுடனான ராணுவ உறவுகளை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

தனது படைகளை ரஷ்யா உடனடியாக வாபஸ் பெறவில்லை என்றால், பொருளாதார தடை விதிப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புடின் அதிரடி

கிரீமியாவில் எடுத்த ராணுவ நடவடிக்கைய நியாப்படுத்தும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மக்களை காப்பாற்ற வேண்டியது ரஷ்யாவின் மனிதாபிமான பணி என்றும் ரஷ்யாவினால் சட்டப்படி உக்ரைனில் ராணுவத்தை பயன்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் உக்ரைனில் ரஷ்யா தற்போது ராணுவத்தை பயன்படுத்த வேண்டியதில்லை என்றும் புடின் தெளிவுபடுத்தியுள்ளார்.


Similar posts

Comments are closed.