அமெரிக்கா- ஜேர்மன் நாடுகளுக்கிடையில் முரண்பாடு

Written by vinni   // March 3, 2014   //

barack-obama-e10dcc69da3adc1dயுக்ரையினிலுள்ள துருப்புக்களை மீளப்பெறாவிடின் ஜி-8 கைத்தொழில் மய நாடுகளின் உறுப்புரிமையில் இருந்து ரஷ்யா நீக்கப்படும் ஆபத்து உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

க்ரைமியா பிராந்தியத்தில் தமது நாட்டுத் துருப்புக்களை நிலைநிறுத்தும் விளாடிமீர் புட்டினின் தீர்மானத்திற்கு ஒபாமா நிர்வாகமும், மேற்குலக நாடுகளும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், கெரியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் ஜி-20 நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடாக ரஷ்யா தொடர்ந்தும் செயற்படும் என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜி-20 அமைப்பு என்பது ஒன்றுபட்ட ஒன்றென குறிப்பிட்டுள்ள ஜேர்மன் வெளிவிவாகர அமைச்சர், யுக்ரைய்ன் விவகாரம் குறித்து ரஷ்யாவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என கூறியுள்ளார்.

புட்டினின் இந்த தீர்மானம் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதற்கு பதில் நடவடிக்கையை மேற்கொள்வதில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மந்த கதியிலேயே செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.