ஊசியை எடுத்து வயிற்றில் குத்திக் கொண்ட மாணவன்

Written by vinni   // March 3, 2014   //

download (1)சீனாவில் தேர்வில் 100 மதிப்பெண்கள் எடுக்காததால், மாணவன் ஒருவன் தனக்கு தானே தண்டனை வழங்கி கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.

சீன பள்ளிகளில் மிக கடுமையான சட்டதிட்டங்கள் இருப்பதால், மாணவர்கள் படிப்பிற்காக ஒருநாளில் பல மணிநேரங்களை செலவிடுகின்றனர்.

இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது, மேலும் மனச்சிதைவு, கோபம், ஆத்திரம், பொறாமை என பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகுகின்றனர்.

சமீபத்தில் ஹெயில்லாங்ஜிங் மாகாணத்தில் வசிக்கும் 9 வயது சிறுவன் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன்.

ஒருநாள் சிறுவனை குளிப்பாட்டும் போது அவனது வயிற்றில் வீக்கம் இருந்ததை தந்தை கவனித்தார்.

அதைப் பற்றி சிறுவனிடம் கேட்டபோது, அவன் காயங்களை மறைத்துக் கொண்டு மழுப்பலாக பதிலளித்தான். ஆனால், அவனுக்கு அடிக்கடி வயிற்றில் வலி ஏற்பட்டு அவதிப்பட்டான். இதையடுத்து, பெற்றோர் அந்த சிறுவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், சிகிச்சையின் போது சிறுவனது வயிற்றில் 4 ஊசிகள் இருப்பது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து சிறுவனிடம் விசாரித்தனர், அப்போது அச்சிறுவன் கூறிய பதில் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

அவன் கூறுகையில், பள்ளி இறுதித் தேர்வில் 100 மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று நினைத்து படித்தேன். ஆனால் 99 சதவீதம் தான் கிடைத்தது. எனவே கடும் கோபத்தால் ஊசிகளை எடுத்து வயிற்றில் குத்திக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது மட்டுமல்லாமல், அவர்களது செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.


Similar posts

Comments are closed.