“சிப்ஸ்” மதிய உணவாக 6 வயது சிறுவன் சஸ்பெண்ட்

Written by vinni   // March 3, 2014   //

suspend_boy_002விதிமுறைகளை மீறி மதிய உணவாக லஞ்ச் பாக்சில் சிப்ஸ் கொண்டு வந்த 6 வயது மாணவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளான்.

பிரிட்டனில் உள்ள ஆரம்ப பள்ளியின் நிர்வாகம் மாணவர்கள் எடுத்து தர வேண்டிய மதிய உணவு வகைகள் குறித்த விதிமுறைகளை வகுத்துள்ளது, இதனை பெற்றோர்களுக்கும் கடிதமாக அனுப்பியுள்ளது.

அதில், மாணவர்களுக்கு அவர்கள் வயதிற்கேற்ற ஆரோக்கியமான உணவுகளை கொடுத்து அனுப்பவேண்டும், சிப்ஸ், இனிப்பு வகைகள், சொக்லேட்கள், நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் ரிலோ என்னும் ஆறு வயது மாணவன், தினமும் தனது மதிய உணவாக சிப்ஸ் பாக்கெட்டுகளை எடுத்து வந்தான்.

இதனையடுத்து அந்த மாணவன் நான்கு நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து பள்ளி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.