டோக்கியோவில் உள்ள தலைமைப்பீடத்தை விற்பனை செய்ய சோனி தீர்மானம்

Written by vinni   // March 3, 2014   //

isஉலகின் முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமாக மக்களின் நன்நம்பிக்கையை வென்ற சோனி நிறுவனம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள தனது தலைமைப்பீடத்தை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.

தனது கட்டமைப்பினை புதுப்பிக்கும் பொருட்டே இந்த முடிவை சோனி நிறுவனம் எடுத்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் 1000 வரையான பணியாளர்களை இடை நிறுத்தவுள்ளதாக அறிவித்திருந்ததுடன் அமெரிக்காவிலுள்ள 20 களஞ்சியங்களையும் மூடவுள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே டோக்கியோவிலுள்ள தலைமைப்பீடத்தினை விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் இதனை விற்பனை செய்வதன் மூலம் 146.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக சோனி பெற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.