ஜனாதிபதி மஹிந்தவினால் எச்சரிக்கப்பட்ட மற்றுமொரு அமைச்சர்!

Written by vinni   // March 3, 2014   //

president_mahinda_rajapaksaஜனாதிபதி தலைமையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு இணையான எச்சரிக்கையை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றுமொரு முக்கிய அமைச்சருக்கும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேற்படி அமைச்சர் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் சில தீர்மானங்களையும் ராஜதந்திர நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது, அரசாங்கத்தின் செயற்பாடுகளை இந்த அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்திருந்ததுடன் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்து வருகிறார்.

இந்த அமைச்சரின் சில கருத்துக்கள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் கடும் எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த அமைச்சர் ஜனரஞ்சக புகழ்பெற்ற அரசியல்வாதி ஒருவருடன் இணைந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் அமைச்சர் ராஜித சேனாரத்னவே பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவுடன் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுயாக அமுல்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்து வருகிறார் என்பது இங்கு நினைவூட்டதக்கது.


Similar posts

Comments are closed.