தோல்விக்காக குற்றம் சொல்ல வேண்டாம்! வீராட் கோஹ்லி

Written by vinni   // March 3, 2014   //

india_pakistan_asian_006ஆசிய கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்ததன் மூலம், இந்தியா கிட்டத்தட்ட வெளியேற வேண்டிய நிலையில் உள்ளது.

ஆசிய கிண்ணப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான்- இந்தியா அணிகள் மோதின.

இதில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தோல்வி குறித்து இந்திய அணியின் தற்காலிக அணித்தலைவர் வீராட் கோஹ்லி கூறுகையில்,

முக்கிய கட்டங்களில் நாங்கள் செய்த சிறிய தவறுகளால் ஆட்டத்தை இழந்துவிட்டோம், இந்த தவறுகளை இனி செய்ய மாட்டோம் என்று நம்புகிறோம்.

நாங்கள் இளம் வீரர்களை கொண்ட அணி, இதனால் தோல்விக்காக எங்களை யாரும் குற்றம் சாட்ட வேண்டாம்.

கடைசி 2 போட்டியில் நாங்கள் போராடி தான் தோற்றோம். எனது வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

நாங்கள் 20 முதல் 30 ஓட்டங்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.

இந்த தோல்வி எனக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை என்றும், இந்த போட்டி மூலம் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது எனவும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.