90 வீதமான மக்கள் நிறைவாக உணவருந்துவதில்லை: சரத் பொன்சேகா

Written by vinni   // March 3, 2014   //

Fonseka speaks to reporters during a news conference in Colomboநாட்டு மக்கள் மூன்று வேளையும் போதுமான உணவை உட்கொள்ள முடியாது காலையிலும் மதியமும் உண்ணும் உணவில் மீதப்படுத்தி அதனை இரவில் உண்ணும் நிலைமையில் வாழ்கின்றனர் என ஜனநாயக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மொரோன்துடுவே பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வாழும் 90 வீதமான மக்கள் தினமும் மூன்று வேளை நிறைவாக உண்டு வாழ்வதில்லை. ஒரு நேரத்தில் உண்ணும் உணவில் பாதியை சேமித்து வைத்து அதனை அடுத்த வேளை சாப்பிட்டு வருகின்றனர்.

நாங்கள் பிரபலமானவர்களிடம் இருந்து ஒதுங்கி விட்டோம். வஞ்சர்களோடு உறங்கி விட்டு எழுந்தால், ஒட்டுண்ணிகளோ எழுந்திருக்க வேண்டும் என்பதால், பிரபலம் என்ற அரசியலில் இருந்து நாங்கள் ஒதுங்கி கொண்டோம்.

இதன் காரணமாகவே தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடக் கூடிய தீப்பந்த சின்னத்துடன் ஜனநாயகக் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தோம். நாங்கள் ராகு காலத்தையோ நல்ல நேரத்தையோ பார்க்கவில்லை.

மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள ஜனநாயகத்தை திரும்ப பெற்றுக்கொடுப்பதற்காகவே நாங்கள் தனிக் கட்சியை தொடங்கினோம்.

எமது கட்சியில் இருப்பவர்கள் என்றும் உங்களை ஏமாற்ற மாட்டார்கள். ஏமாற்றவும் முடியாது. அப்படியான நபர்களுக்கு எமது கட்சியில் இடமில்லை. நாட்டை கட்டியெழுப்பும் நாட்டை நேசிக்கும் நபர்களே எமக்கு தேவை என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.