தேனின் தித்திக்கும் இனிப்பு

Written by vinni   // March 2, 2014   //

Honey28தேனின் அதிகப்படியான இனிப்பிற்கு காரணம் அதில் உள்ள ஃப்ரக்டோஸ் எனப்படும் சர்க்கரை தான்.
சர்க்கரையில் பல வகைகள் உள்ளன, கரும்பில் உள்ளது சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரை.

இதை இன்வெர்டேஸ் என்கிற நொதியால் சிதைத்தால், குளுகோஸ், ஃப்ரக்டோஸ் என்ற இரு சிறு சர்க்கரை பொருட்கள் கிடைக்கும்.

இவற்றில் ஃப்ரக்டோஸ் எல்லாவித பழங்களிலும் இருக்கிறது.

பழங்களின் சுவைக்கு இவை தான் காரணம், இதுதவிர பூவிலுள்ள மதுவிலும் இந்த சர்க்கரை தான் நிரம்பியுள்ளது.

தேன் எப்படி கிடைக்கிறது?

தேனீக்கள் மலர்களின் மகரந்தங்களிலிருந்து , பூந்தேனை குடித்து வந்து, தேன் அடைகளில் தேக்கி வைத்து தித்திக்கும் தேனாய் நமக்கு தருகின்றன.

தேனீக்கள் உடலில் சுரக்கும் ஒருவகை சுரப்பி நீர், பூந்தேனை நாமருந்தும் தேனாக மாற்றுவதில் பெறும் பங்கு வகிக்கின்றது.

தேனின் தரம்

தேனில் இனிப்பு சத்து அதிகம். ஃப்ரக்டோஸ், குளுகோஸ் அதிகமாகவும், தாது பொருட்கள் குறைவாகவும் உள்ளன.

அந்ததந்த பகுதிகளில் பூக்கும் மலர்களின் தன்மையை பொருத்தே, தேனின் தன்மையும் அமையும்.

தேனில் உள்ள ஈரபதத்தின் அடிப்படையில் தேனின் தரம் நிர்ணயம் செய்யபடுகின்றது.

ஈரப்பதம் 20 சதவிகிதத்திற்கு குறைவாக இருந்தால், அது ‘ஸ்பெஷல்’ கிரேடு தேன் எனவும், 20 முதல் 22 சதவிகிதம் ஈரப்பதம் இருந்தால், அது ‘A’ கிரேடு தேன் எனவும், 22 முதல் 25 சதம் ஈரப்பதம் இருந்தால் அது ‘ஸ்டாண்டர்ட்” கிரேடு எனவும் மூன்று வகையாக தரம் பிரிக்கப்படுகின்றன.


Similar posts

Comments are closed.