ரஷ்யாவின் அத்துமீறல்: சர்வதேச வர்த்தக மாநாட்டை புறக்கணிக்கும் ஒபாமா

Written by vinni   // March 2, 2014   //

onama_phone_003ரஷ்யாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கலந்து கொள்வதில் சந்தேகம் நிலவியுள்ளது.

யுக்ரேன் விவகாரங்களில் ரஷ்யா தலையீடு செய்வதை அடுத்து , ரஷ்யாவிற்கான விஜயத்தை இரத்து செய்யக்கூடும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யுக்ரேனில் தொடரும் வன்முறைகளை அனுமதிக்க முடியாது எனவும், மோதல்களை கண்டிப்பதாகவும் பராக் ஒபாமா எச்சரித்திருந்தார்.

அத்துடன் யுக்ரேன் மக்களுக்காக ரஷ்யாவுடன் இணங்கி செயற்படுவதற்கு அமெரிக்க விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், அதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தகக்து.

அமெரிக்க புலனாய்வு தகவல்களை கசிய விட்ட எட்வர்ட் ஸ்நோவ்டனுக்கு ரஷ்யா புகலிடம் வழங்கியமையை அடுத்து ரஷ்ய ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளை அமெரிக்க ஜனாதிபதி இரத்து ஏற்கனவே இரத்து செய்திருந்தார்.

இந்நிலையில் யுக்ரேன் ஜனாதிபதி பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து யுக்ரேனில் ஆரப்பாட்டங்கள் மற்றும் கட்டங்களை கைப்பற்றும் முயற்சிகள் ரஷ்ய ஆயுததாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இவ்வாறான சம்பவங்களுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி ரஷ்யாவிற்கான தனது பயணத்தை இரத்து செய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து தமது நாட்டு பிரஜைகளை யுக்ரேன் நாட்டுக்கு செல்வதை தவிர்த்துக்’ கொள்ளுமாறு அமெரிக்கா மக்களை அறிவுறுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.