சோகத்தில் முடிந்த கேளிக்கை திருவிழா

Written by vinni   // March 2, 2014   //

bolivia_accident_002பொலிவியாவில் கேளிக்கை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாயினர், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பொலிவியாவின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் ஒரூரோ நகரில் கேளிக்கை திருவிழா தொடக்க நாள் நிகழ்ச்சியையொட்டி நேற்று பிரம்மாண்ட பேரணி நடந்தது.

இதில் 35 ஆயிரம் நடன கலைஞர்களும், 6 ஆயிரம் இசைக் கலைஞர்களும் கலந்து கொண்டு அணிவகுத்து சென்றனர், அதை கண்டுகளிக்க 3 லட்சம் பேர் திரண்டனர்.

இந்த கோலாகலத்திற்கு இடையில் பேரணி சென்று கொண்டிருந்த ஒரு பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது.

இதில் இசைக் கலைஞர்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து பேரணி வேறு வழியாக திருப்பி விடப்பட்டது, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.