விடுதலைப்புலிகள் தோல்வியை தமிழர்களால் ஏற்கமுடியவில்லை: அமைச்சர் அமுனுகம

Written by vinni   // March 2, 2014   //

isவிடுதலைப்புலிகள் தோல்வியை தமிழக கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே தான் இலங்கையை குறை கூறுகின்றனர் என அந்நாட்டு துணை நிதியமைச்சர் சரத் அமுனுகம கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, இலங்கை துணை நிதியமைச்சர் சாரத் அமுனுகம இந்தியா சென்றுள்ளார்.

அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது,

இலங்கையில் 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரின்போது எந்தவித மனித உரிமை மீறலும் நடைபெறவில்லை.

இறுதிக்கட்ட போரின்போது, விடுதலைப் புலிகள் தோல்வியடைந்ததை தமிழக அரசியல் கட்சிகளாலும், தமிழர் அமைப்புகளாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால்தான் இலங்கை மீது தொடர்ந்து குறை கூறி வருகின்றனர்.

இது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு நாங்கள் பதிலளித்திருக்கிறோம் என்றார்.


Similar posts

Comments are closed.