புலிகளே அதிகளவிலான காணாமல் போதல் சம்பவங்களுக்கு பொறுப்பு என்கிறது அரசாங்கம்!

Written by vinni   // March 2, 2014   //

ltteநாட்டில் இடம்பெற்ற அதிகளவான காணாமல் போதல் சம்பவங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு என அரசாங்கம் அறிவித்துள்ளது.

போர் இடம்பெற்றக் காலத்தில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் 80 வீதமான சம்பவங்களுக்கு புலிகளே பொறுப்பு என தெரிவித்துள்ளது.

காணாமல் போதல் சம்பவங்களில் அதிகமானவை சிறுவர் கடத்தப்பட்டவை தொடர்பானது.

போர் இடம்பெற்ற காலத்தில் புலிகள் சிறுவர் போராளிகளை அதிகளவில் பயன்படுத்திக் கொண்டதாக அரசாங்க உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், காணாமல் போதல் சம்பவங்களுக்கு அதிகளவில் அரசாங்கப் படையினரே பொறுப்பு என தமிழ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன


Similar posts

Comments are closed.