சீனாவில் மர்ம மனிதர்கள் தாக்குதல்! 28 பேர் பலி, 113 பேர் காயம் (வீடியோ இணைப்பு)

Written by vinni   // March 2, 2014   //

china_attack_001சீனாவின் தென்மேற்கில் உள்ள கன்மிங் நகர் ரயில் நிலையத்தில் மர்மக் கும்பல் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு மர்மக் கும்பல் ஒன்று ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் மீது கத்திகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த பயங்கரத் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததாகவும் 113 பேர் காயமடைந்துள்ளதாகவும் சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“தாக்குதல் நடத்தியவர்கள் கருப்பு நிற உடை அணிந்து, நீண்ட கத்திகளுடன் வந்தனர்’ என்று தாக்குதலை நடத்தியுள்ளதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை பொலிஸார் சுட்டுக் கொன்றதாக உள்ளூர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.