போராட்டத்தின் எதிரொலி! அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திண்டாடும் மக்கள்

Written by vinni   // March 2, 2014   //

venezula_protest_002வெனிசூலாவில் தொடர்ச்சியாக நடந்து வரும் போராட்டங்களால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

தென் அமெரிக்காவின் வெனிசூலா நாட்டில் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

காரகாஸ் உட்பட பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனால் வாகன, லாரிகள் போக்குவரத்து முடங்கி விட்டது, மேலும் பால், காய்கறிகள், சமையல் கியாஸ் உட்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இப்படியான நிலை தொடர்ந்து நீடிக்குமானால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவர் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் போராட்டத்தையட்டி நடைபெற்ற வன்முறைகளில் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்.


Similar posts

Comments are closed.