மீன் கடையில் இளம் ஜோடி செய்த அட்டகாசம்….. பொலிசார் வலைவீச்சு!….

Written by vinni   // March 1, 2014   //

fish_market_001.w245சிலர் சவாலுக்காக வேடிக்கையில் ஈடுபடுவதை பொழுதுபோக்கு என நினைக்கிறார்கள். ஆனால் இது சிலநேரங்களில் விபரீதமாக போய் முடிவந்துண்டு.

அதுபோல இங்கிலாந்து நாட்டிலுள்ள அசிரிங்டன் என்ற இடத்தில் ஒரு இளம்பெண் பிரபல வணிக வளாகத்திற்கு சென்று பதப்படுத்திய மீன்களை வாங்கினார்.

அங்கு பில் போடும் இடத்தில் 52 வயதுள்ள பெண் ஊழியர் இருந்தார். மீன்கள் குறித்து விவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண் திடீரென்று மீன்களை கொண்டு பெண் ஊழியரை கடுமையாக தாக்கி விட்டு ஓட்டம் பிடித்தார்.

இதை அருகில் நின்று வாலிபர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்தார். இளம்பெண்ணை பின்தொடர்ந்து அவரும் கம்பி நீட்டினார்.

இந்த தாக்குதல் சம்பவம் பற்றி தகவல் கிடைத்த பொலிசார் கடையில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்ததில் 15 வயது பெண்ணும், 18 வயது ஆணும் சேர்ந்து இந்த விபரீத விளையாட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பொலிஸ் உயர் அதிகாரி கூறுகையில், ‘இதுபோன்ற விளையாட்டு அநாகரீகமானது. இந்த இளம்ஜோடியை கண்டுபிடித்து தண்டிப்போம் என்று உறுதியாக கூறியதுடன் இவர்களை பற்றி தகவல் கிடைத்தால் உடனே தெரிவியுங்கள் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

உங்களை சிரிக்க வைப்பதற்காக இந்த காணொளி….


Comments are closed.