7வது ஐபிஎல் தொடர் எங்கு நடைபெறும்?

Written by vinni   // March 1, 2014   //

ipl7வது ஐபிஎல் தொடரை இந்தியா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

7வது ஐபிஎல் போட்டிகள், வருகிற ஏப்ரல் 9ம் திகதி முதல் ஜூன் 3ம் திகதி வரை நடக்க உள்ளது.

இதே காலகட்டத்தில் லோக்சபா தேர்தலும் நடப்பதால், பிரிமியர் தொடருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய அரசு கைவிரித்தது.

இதுகுறித்து விவாதிக்க ஒரிசாவில் உள்ள புவனேஸ்வரில் இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,) செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.

இதில் மே 15க்குள் வாக்கு எண்ணிக்கை முடியும் பட்சத்தில் 3 முதல் 5 சுற்று போட்டிகளை வங்கதேசம் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது என திட்டம் வகுக்கப்பட்டது, மீதமுள்ள போட்டிகள் இந்தியாவில் நடக்கும்.

இதுகுறித்து செயற்குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், மே மாதம் முழுவதும் லோக்சபா தேர்தல் பணி தொடர்ச்சியாக நடந்தால், தென் ஆப்ரிக்க மண்ணில் பிரிமியர் தொடர் முழுமையாக நடக்கும்.

ஒருவேளை மே 15க்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து விட்டால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது வங்கதேசத்தில் தொடரை நடத்துமாறு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

மீதிமுள்ள போட்டிகளை இந்தியாவில் நடத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசன் கூறுகையில், லோக்சபா தேர்தல் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதன் பின்தான், ஐபிஎல் தொடர் நடக்கும் இடம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

தேவைப்பட்டால் வெளிநாடுகளில் சில போட்டிகள் நடக்கலாம். இப்போட்டிகளை நடத்த தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் ஆர்வமாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

பிரிமியர் தொடர் தலைவர் ரஞ்சிப் பிஸ்வால், வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்துக்கு சூதாட்டத்தை எப்படி தடுப்பது என கற்றுக் கொடுக்கப்படும் என்றும், எனவே ஏழாவது தொடரை ஒளிவு மறைவின்றி நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.