பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படும் அதிவேக Broadband இணைய சேவை

Written by vinni   // March 1, 2014   //

virgin_media_001Virgin Media வலையமைப்பானது 152Mb வேகம் கொண்ட Broadband இணைய சேவையை பிரித்தானியாவில் அறிமுகம் செய்கின்றது.

இதன் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒரு நிமிட நேரத்தில் தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 2007ம் ஆண்டில் காணப்பட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை விடவும் தற்போது 55 சதவீத அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவித்த அந்நிறுவனம் ஆரம்பத்தில் 30Mb வேக இணைய இணைப்பைக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் தமது இணைப்பு வேகத்தினை 50Mb, 60Mb, 100Mb, 120Mb மற்றும் 152Mb வேகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.