நாடகங்களை ஒளிப்பரப்பவும் பாலியல் ரீதியான இலஞ்சம் கொடுக்கப்பட வேண்டிய நிலைமை!: நதீஷா ஹேமமாலி

Written by vinni   // March 1, 2014   //

Nadeesha-Hemamali-Hot-wallpapersதொலைக்காட்சி நாடகங்களை ஒளிப்பரப்பும் அனுமதிகளை பெற பாலியல் ரீதியான இலஞ்சத்தை கொடுக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண வேட்பாளர் நடிகை நதீஷா ஹேமமாலி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறந்த படைகளை உருவாக்கும் கலைஞர்கள் தமது படைப்புகளுக்காக அப்படியான விடயங்களை அணுவகுவதில்லை.

உரிய முறையில் படைப்புகளை உருவாக்காத நபர்களே இவ்வாறான விடயங்களில் பாலியல் ரீதியான அணுகலை மேற்கொண்டு குறைந்த விலையிலேனும் தமது படைப்புகளை வெளியிட முன் வருகின்றனர்.

இது கலைத்துறையில் மாத்திரமல்ல, வேறு துறைகளிலும் காணப்படுகிறது. புதிதாக பணியில் சேரும் இளம் பெண்ணொருவர் அந்த நிறுவனத்தில் உள்ள அதிகாரமிக்கவர்களின் அழுத்தங்களுக்கு உள்ளாகலாம்.

பொதுவான அனைவரும் அப்படியானவர்களாக இல்லாவிட்டாலும், சிலர் அப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். புதிதாக கலைத்துறைக்கு வரும் நடிகைகளுக்கு மாத்திரமல்ல, எந்த துறையிலும் புதிதாக வரும் இளம் பெண்களுக்கு இது பாரிய அநீதி.

இலங்கையின் தற்போது பாலியல் ரீதியான குற்றச் செயல்கள் பற்றிய செய்திகளை அடிக்க கேட்க கூடியதாக இருக்கின்றது.

அத்துடன் பல்வேறு வகையான இடையூறுகளை சந்தித்தவர்கள் பற்றிய செய்திகள் வருகின்றன. அழுத்தங்கள், தொந்திரவுகளை கொடுக்கும் நபர்களின் மனோபாவமே இதற்கு காரணம்.

அவர்கள் கடும் அழுத்தங்களில் இருப்பதன் காரணமாகவே ஏனையோரை அழுத்தங்களுக்கு உட்படுத்துகின்றனர் என நதீஷா ஹேமமாலி தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.