கோபிதாஸின் பூதவுடலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அஞ்சலி

Written by vinni   // March 1, 2014   //

magazineமகஸீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி 24ம் திகதி உயிரிழந்த தமிழ் அரசியல் கைதி விஸ்வலிங்கம் கோபிதாஸின் பூதவுடலுக்கு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் இன்று வடமராட்சி புலோலியிலுள்ள கோபிதாஸின் இல்லத்திற்குச் சென்று இஞ்சலி செலுத்தினர்.

அத்துடன், பெருமளவான பொதுமக்கள் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதேவேளை, கோபிதாஸின் இறுதிக் கிரியை நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன. அவரது பூதவுடல் நீதிமன்ற உத்தரவின்படி நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன்போது, கோபிதாஸின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது ஆறுதலையும் தெரிவித்திருந்தனர்.


Similar posts

Comments are closed.