71 வயதில் ஆபாச படம்! நாடாளுமன்றத்தில் நடந்த கூத்து

Written by vinni   // March 1, 2014   //

mp_spain_002ஸ்பெயினில் மிகவும் காரசாரமாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது, எம்.பி ஒருவர் ஆபாசபடத்தை ரசித்து பார்த்து கொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவும், தங்கள் சார்பாக பணியாற்றுவதற்காகவும் எம்.பி.க்களை தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

ஆனால் அவ்வாறு தேர்வாகி பதவிக்கு வரும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்கிறார்களா என்றால் கேள்விக்குறி தான்.

அந்தவகையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏஞ்சர் ரெவிலா(வயது 71), ஆபாச படம் பார்ப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

நாடாளுமன்றதில் விவாதம் நடைபெற்றபோது, அதனைக் கவனிக்காமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அதில், ஆடையில்லாமல் இருக்கும் பெண்ணின் படத்தை பார்த்து கொண்டு இருப்பது போன்றக் காட்சிகள் அங்கிருந்த கமெராவில் படமாகிவிட்டது.

தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பார்த்த அந்நாட்டு மக்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் எம்.பியோ தன்னுடைய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், இதழில் கட்டுரையை படித்துக் கொண்டிருந்த போது குறித்த படம் வந்துள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.


Similar posts

Comments are closed.