சீனாவும் ரஷ்யாவும் சில சமயம் இந்தியாவும் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Written by vinni   // March 1, 2014   //

makinthaஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவரவுள்ள அமெரிக்காவின் செயலை ஒரு பாடசாலை மாணவனுடன் மல்யுத்த வீரர் ஒருவர் யுத்தத்திற்கு போவது போல உள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

‘ஒரு தீர்மானம் தேவையற்றது. அவர்களிடம் சான்று இருப்பின் அவர்கள் அதை எம்மிடம் தந்திருக்க வேண்டும்’ எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மூன்று வருடங்களுக்கு பின்னர் வெளிநாட்டு ஊடகங்களை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையில் சர்வதேச விசாரணை ஒன்றை கோரும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரலாம் என்ற நிலைமையில் ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது.

வொஷிங்டன் ஏன் ஒரு விசாரணையை வலியுறுத்தியுள்ளது என்பதையிட்டு தனக்கு எதுவும் விளங்கவில்லை என அவர் கூறினார்.

‘இது கஸியஸ் கிளே என்று அறியப்பட்ட உலகப் பிரசித்த பொக்ஸின் சம்பியன் முஹம்மட் அலியுடன் பாடசாலை மாணவனொருவன் மோதுவது போல உள்ளது’ என ஜனாதிபதி கூறினார்.

ஐ.நா மனித உரிமையின் ஆணையாளரின் அறிக்கை எதேச்சாதிகரமானது, தேவையில்லாத தலையீடு, அரசியல் நோக்கம் கொண்டது என கண்டித்த இலங்கை அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை நிராகரித்தது.புலம்பெயர்ந்த தமிழர்களின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஐக்கிய இராச்சியமும் கனடாவும் ஆதரிக்கின்றன. சீனாவும் ரஷ்யாவும் சில சமயம் இந்தியாவும் இலங்கைக்கு ஆதரவு வழங்குமென ஜனாதிபதி கூறினார்.


Similar posts

Comments are closed.