ஊடக நிறுவனங்கள் அல்லது இணையத்தளங்கள் தணிக்கை பற்றி அறியவில்லை: ஐ.நாடுகள்

Written by vinni   // March 1, 2014   //

13496003-grunge-flag-of-united-nations-image-is-overlaying-a-detailed-grungy-textureஇலங்கையில் சில ஊடக நிறுவனங்கள் அல்லது இணையத்தளங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளமை மற்றும் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அறியவில்லை என ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இணையத்தளமொன்று அண்மையில் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கை தொடர்பில் நியூயோர்க்கில் ஐ.நா பேச்சாளரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அந்த சம்பவம் பற்றி தமது அமைப்புக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐ.நா குழுவினர் ஐ.நா அமைப்பு தொடர்பான பிரச்சினைகளை தலைமையகத்திற்கு அறிவித்த போதும் அவர்கள் ஊடக தணிக்கை மற்றும் தடை பற்றி குறிப்பிட்டிருக்கவில்லை என ஐ.நா பேச்சாளர் மார்டின் நெசர்கி கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பில் உள்ள ஐ.நா குழுவுடன் எனக்கு தற்போது நேரடியான தொடர்புகள் இல்லை. இதனால் என்னால் அவர்களுக்கு பதிலளிக்க முடியாது.

கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன். குறித்த விடயம் தொடர்பில் செயலாளர் நாயகம் தனது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதில்லை என தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.