அரசியல் ரீதியான கைதிகள் தொடர்பில் எங்களால் எதுவும் செய்யமுடியாது – ஜோன்நீல்

Written by vinni   // March 1, 2014   //

jonh-neel_CI-70x50இலங்கையில் வைத்து அரசியல் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தங்களால் ஏதும் செய்ய முடியாதிருப்பதாக தெரிவித்த பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனை பிரிவுத் தூதுவர் ஜோன்நீல் தெரிவித்தார்.

அதேவேளை இலங்கை சிறைகளினில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரிட்டிஸ் பிரஜைகளான அரசியல் கைதிகள் எவ்வளவு பேருள்ளனர் என்பது பற்றியும் தமக்கு தெரியாதெனவும் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தினில் ஊடகவியலாளர்களது  கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள பிரித்தானிய பிரஜைகளின் நலன்புரிசார் பிரச்சினைகளுக்கு உதவிகளை வழங்கும் முகமாக பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சந்திப்பு ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனை பிரிவுத் தூதுவர் ஜோன்நீல் தலைமையில் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது.

அதன்படி பிரித்தானிய பிரஜைகள் மற்றும் அந்தநாட்டில் பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர்கள் என தற்காலிகமாக நாட்டில் தங்கியிருப்போருக்கு ஏற்படும் நலன்புரிசார் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய உதவிகள் மற்றும் வழங்க முடியாத உதவிகள் தொடர்பிலான ஆலோசனை வழங்கும் கலந்துரையாடலாகவே இது அமைந்திருந்தது.

குறித்த கலந்துரையாடல் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர் எமது நாட்டில் பிரஜா உரிமை பெற்று தற்காலிகாக இலங்கையில் தங்கியிருக்கும் பிரித்தானியர்கள் மற்றும் இலங்கையர்களுக்கு இலங்கையில் உள்ள சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நலன்புரிசார் பிரச்சினைகள் தொடர்பில் நாம் வழங்கக் கூடிய உதவிகள் மற்றும் வழங்க முடியாத உதவிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிவருகின்றோம்.

அதன்படி இவர்களுக்கான அதிகமாக பொலிஸ் நிலையம் மற்றும் வைத்தியசாலைகளிலேயே பிரச்சினைகள் வருகின்றது. எனவே பாதிக்கப்பட்டவர் பிரித்தானிய அரசுக்கு உடனடியாக தெரியப்படுத்தும் இடத்து ஒன்றோ அல்லது இரண்டு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றார்.


Similar posts

Comments are closed.