ஜனாதிபதித் தேர்தல் 2016ஆம் ஆண்டுக்கு முன்னர் இல்லை – ஜனாதிபதி

Written by vinni   // March 1, 2014   //

Sri Lankan President Mahinda Rajapaksa gestures as he disembarks his airplane in Colombo2016ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தப்போவதில்லை என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ தெரிவித்தார்.   கொழும்பிலுள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களை ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் கொழும்பில் நேற்றுச் சந்தித்துப் பேசினர்.

ஜனாதிபதித் தேர்தலை முன் கூட்டியே இந்த வருடம் அல்லது அடுத்த வருடத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்படுகிறது என்று கூறப்படுவது குறித்து ஜனாதிபதியிடம் அங்கு கேள்வி எழுப்பப்பட்டது.

தனது இரண்டாவது பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு முடிவதற்கு முன்னதாக தேர்தல் நடத்தும் எண்ணம் எதுவும் தனக்குக் கிடையாது என்று மஹிந்த ராஜபக்­ஷ அப்போது தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் பின்னணியில் அமெரிக்காவுக்கு வேறு சதி நோக்கங்கள் இருக்கின்றன என்றும் ஜனாதிபதி குற்றஞ்சாட்டினார்.

இலங்கை அரசுக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் முதலில் அவை கட்டாயமாகத் தம்மிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அங்கு தெரிவித்தார்.

எப்படியிருந்தாலும் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகள் இந்தத் தீர்மானத்தால் பாதிக்கப்படாது என்றும் அவர் கூறினார். இதே கருத்தை அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் தெரிவித்தார்.    இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரு தரப்புத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு எதிராக நட்பு நாடுகளுடன் சேர்ந்து இலங்கை பதில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வராது என்றும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.