மனித உரிமைப் பேரவை அமர்வுகளை கூட்டமைப்பு சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – வீ.ஆனந்தசங்கரி

Written by vinni   // March 1, 2014   //

anandasangariநேர்மையான மற்றும் நம்பகமான பிரதிநிதிகள் குழுவொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கோரியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனிடம் இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் மிகவும் முக்கியமான ஓர் சந்தர்ப்பமாகும் எனவும் அதனை கூட்டமைப்பு சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனுபவம் இல்லாதவர்களை ஜெனீவாவிற்கு அனுப்பி வைக்க வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் மற்றும் சார்க் மாநாடு போன்ற முக்கிய சந்தர்ப்பங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.


Similar posts

Comments are closed.