விபச்சாரி மீது வாலிபர் பரபரப்பு புகார்

Written by vinni   // February 26, 2014   //

sex_worker_002லண்டனில் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவருக்கு எதிராக வாலிபர் புகார் பதிவு செய்துள்ளார்.
லண்டனில் சில தினங்களுக்கு முன் வாலிபர் ஒருவர் விலைமாதர் விடுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு கிழக்கு ஐரோப்பிய பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க எண்ணினார், அப்போது அந்த பெண் அதற்கு மறுத்துள்ளார்.

இதனை அடுத்து அதிருப்தி அடைந்த அந்த வாலிபர் பாலியல் தொழிலாளிக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்.

தனக்கு நடந்தது குறித்து தொழில் நடைமுறையில் நடவடிக்கை எடுக்க கோரி ஹரோவ் கவுன்சிலுக்கு(Harrow Council) மெயில் அனுப்பியுள்ளார்.

வாலிபர் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டதாவும், அவர் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் அப்படி நடந்துகொள்ள முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார் என்று கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹரோவ் கவுன்சிலின் தலைவரான சுசான் ஹால், விபச்சாரம் உலகின் பழைய தொழிலாக இருக்கலாம், ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக எங்களுக்கு புகார் வந்துள்ளது புதியது, இது வர்த்தக தரத்தில் அடங்காது என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.