யூடியூப் வீடியோக்களை GIF கோப்பாக மாற்றுவதற்கு

Written by vinni   // February 25, 2014   //

youtube_gif_001உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோ கோப்புக்களை GIF கோப்புக்களாக மாற்றுவதற்கு Gifff.fr (http://gifff.fr/) எனும் தளம் உதவி புரிகின்றது.

இத்தளத்திற்கு சென்று நீங்கள் GIF கோப்பாக மாற்றவேண்டிய வீடியோவின் யூடியூப் URL இனை உட்புகுத்தி Enter கீயினை அழுத்த வேண்டும்.

அதன் பின்னர் தோன்றும் விண்டோவில் தேவையான பகுதிகளை தேர்ந்தெடுக்கும் வசதி காணப்படுகின்றது.

அதேபோல செட்டிங்ஸ் செய்யும் வசதியும் காணப்படுகின்றது.

இவற்றினை தெரிவு செய்ததன் பின்னர் Make it So என்பதனை அழுத்தி செயன்முறை முடிந்த பின்னர் Download Now என்பதனை அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


Similar posts

Comments are closed.