தொடர்ந்து முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா

Written by vinni   // February 25, 2014   //

south_africa_celebrate_001டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) நேற்று வெளியிட்டது.
இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ்(935) முதலிடத்திலும், தென் ஆப்ரிக்காவின் ஆம்லா(879), இலங்கையின் சங்கக்கார(879) 2ம் இடத்திலும் உள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான்கு இன்னிங்சிலும் சேர்த்து, 214 ஓட்டங்கள் எடுத்த இந்தியாவின் விராத் கோஹ்லி(784 புள்ளி) முதல் முறையாக 8வது இடம் பிடித்தார், மற்றொரு இந்திய வீரர் புஜாரா(819 புள்ளி) 7வது இடத்தில் நீடிக்கிறார்.

ஆல்– ரவுண்டர் பட்டியலில் இந்தியாவின் அஷ்வின்(373) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

அணிகளுக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்கா(133) முதலிடத்திலும், இந்திய அணி(112) இரண்டாவது இடத்திலும், அவுஸ்திரேலியா(111) மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றது.


Similar posts

Comments are closed.