பயிற்சி பெற பெங்களூரு வருவாரா டோனி?

Written by vinni   // February 25, 2014   //

dhoni_001இந்திய அணியின் அணித்தலைவரான டோனி பயிற்சிகள் பெறுவதற்கு பெங்களூரு வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அணித்தலைவர் டோனிக்கு உடலின் இடதுபக்கம் பிடிப்பு ஏற்பட்டது.

இதனால் ஆசிய கிண்ணத் தொடரிலிருந்து விலகினார், கோஹ்லி அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில்(என்.சி.ஏ.,) 10 நாட்கள் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சி மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் டோனி பெங்களூரு வருவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

இதுகுறித்து என்.சி.ஏ தலைவர் மாத்யூஸ் கூறுகையில், காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சியில் ஈடுபட டோனி இங்கு வருவாரா, இல்லையா என இப்போது வரையிலும் எங்களுக்கு எவ்வித செய்தியும் வரவில்லை. மற்றபடி இதுகுறித்து வேறெதுவும் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது டோனி வீட்டில் தான் உள்ளார் என்றும், பயிற்சி தேவைப்படும் என்று உணர்ந்தால் அடுத்த சில நாட்களுக்கு பின் பெங்களூரு வரலாம் எனவும் மற்றொரு நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.