நவிபிள்ளையின் பரிந்துரைகளை ஏற்க முடியாது – இலங்கை திட்டவட்டம்

Written by vinni   // February 25, 2014   //

navaneetham-pillai-5-380x270ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென நவநீதம்பிள்ளை பரிந்துரை செய்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்று நிறுவப்பட வேண்டும் எனவும், உள்ளக விசாரணைகளை சர்வதேச சமூகம் கண்காணிக்க ஆவண செய்ய வேண்டுமெனவும் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியிருந்தார்.

நவநீதம்பிள்ளை பக்கச்சார்பான முறையில் செயற்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளை தேவையற்ற வகையில் நாடொன்றின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நவநீதம்பிள்ளையின் அறிக்கையானது முன்கூட்டிய தீர்ப்பை வழங்கக் கூடிய வகையிலும், திட்டமிட்ட வகையில் இலங்கைக்கு எதிராகவும் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.