போர்க்குற்ற விசாரணை: ஐநாவில் வலுவான பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்

Written by vinni   // February 25, 2014   //

amnesty_CIஇலங்கை மீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள பலமான புதிய அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த சர்வதேசம் சமூகம் செயற்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நியாயம் வேண்டி நிற்பது வெட்கம் கெட்ட செயல் என சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய தலைமை நிர்வாகி ஆனந்தபத்மநாபன் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தி நவிபிள்ளை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை முக்கியமானதும் அவசர மற்றும் கசப்பான நினைவூட்டல் ஆகுமெனவும் இனியும் தாமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேசம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு செவிசாய்க்காது சர்வதேசத்தின் கண்ணில் மண்ணை தூவும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நவிபிள்ளையின் புதிய அறிக்கை ஒரு கண் திறப்பாக இருக்கட்டும் எனக் கூறியுள்ள அவர், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தும் வலுவான பிரேரணை ஒன்றை ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என ஐநாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நவிபிள்ளையின் கண்டுபிடிப்புகள் எங்களது கருத்துகளுடன் ஒத்துப்போவதாகவும் இலங்கையில் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் குறித்து தமக்கு இன்னும் ஆதாரம் கிடைத்த வண்ணமுள்ளதாகவும் ஆனந்தபத்மநாபன் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.